search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வைரல் வீடியோ"

    • ஜப்பானில் பயணிகள் விமானம் தீப்பற்றி எரிந்தது.
    • விமான நிலையத்தில் பதற்ற சூழல் உருவானது.

    ஜப்பானின் டோக்கியோ நகரில் உள்ள ஹனோடா விமான நிலையத்தில் ஓடுபாதையில் தரையிறங்கிய பயணிகள் விமானம் ஒன்று வேகத்தை குறைத்துக் கொண்டே வந்தபோது, நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கடலோர காவல்படையின் விமானத்தின் மீது மோதியது. இதன் காரணமாக பயணிகள் விமானம் தீப்பற்றி எரிந்தது.

    இந்த விபத்து காரணமாக விமான நிலையத்தில் பதற்ற சூழல் உருவானது. தீப்பற்றி எரிந்த பயணிகள் விமானத்தில் 350-க்கும் அதிகமானோர் சிக்கிக் கொண்டனர். இவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு விட்டனர் என ஏற்கனவே தகவல் வெளியானது. எனினும், கடோலர காவல் படைக்கு சொந்தமான விமானத்தில் இருந்த பணியாளர்கள் ஐந்து பேர் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்.

     


    இந்த நிலையில் தீப்பற்றி எரியும் விமானத்தில் இருந்து பயணிகள் பத்திரமாக மீட்கப்படும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. இந்த வீடியோவில், தீப்பற்றி எரியும் விமானத்தில் இருந்து அவசரகால பலூன் வழியே பத்திரமாக கீழே இறங்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. விமானம் கொழுந்துவிட்டு எரியும் போது, பயணிகள் அதில் இருந்து வெளியேறும் காட்சிகள் பார்க்கவே பயத்தை ஏற்படுத்துகின்றன.

    பாதுகாப்பு பலூன் வழியே விமானத்தில் இருந்த 367 பயணிகள், 12 பேர் அடங்கிய பணியாளர் குழு என அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் எட்டு பேர் சிறுவர்கள் என்றும் கூறப்படுகிறது. கடலோர காவல்படை விமானத்தில் மொத்தம் ஆறு பேர் இருந்த நிலையில், ஒருவர் மட்டுமே பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.



    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உடல் முழுவதும் எரிந்து காணப்படுகிறது. அவர் உயிருடன் எரிக்கப்பட்டாரா என்பது தெரியவில்லை.
    • வீடியோ 7 வினாடிகள் ஓடுகிறது. அதில் குக்கி என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளது.

    மணிப்பூரில் பழங்குடியின வாலிபர் ஒருவரின் உடலை குழியில் வைத்து எரிக்கும் வீடியோ காட்சிகள் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஒரு வாலிபர் கருப்பு நிற டீ-சர்ட் மற்றும் டிரவுசர் அணிந்துள்ளார். அவர் குழியில் படுத்த நிலையில் உள்ளார். அவரது முகத்தில் காயம் உள்ளது. உடல் முழுவதும் எரிந்து காணப்படுகிறது. அவர் உயிருடன் எரிக்கப்பட்டாரா என்பது தெரியவில்லை.

    இந்த வீடியோ 7 வினாடிகள் ஓடுகிறது. அதில் குக்கி என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோ மணிப்பூர் பகுதியில் பல வாட்ஸ்-அப் குழுக்களில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாவதால் மணிப்பூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வீடியோ குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வீடியோ மே மாதம் முதலே பரவி வருவதாக தெரிகிறது. அவர் யார் என்று அடையாளம் கண்டறியும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    • சுருள் முடி ஸ்டைல் செய்வது என வித்தியாசமான அலங்காரத்தை விரும்புகின்றனர்.
    • பயனர்கள் அந்த வாலிபரை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

    சமீபகாலமாக இளைஞர்கள், இளம்பெண்கள் பலரும் தங்களது தலைமுடிக்கு கலர் அடிப்பது, சுருள் முடி ஸ்டைல் செய்வது என வித்தியாசமான அலங்காரத்தை விரும்புகின்றனர்.

    அந்த வகையில் தற்போது எக்ஸ் பக்கத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் வாலிபர் ஒருவர் கியாஸ் லைட்டரை பயன்படுத்தி சுருள் முடி ஸ்டைல் உருவாக்கும் 'டெக்னிக்' பயனர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.

    அதில், வாலிபர் கியாஸ் லைட்டரை லேசான தீயில் சூடாக்குகிறார். பின்னர் அதனை தலைமுடியில் வைத்து அதன்மீது முடியை சுற்றுவதன் மூலம் அழகான சுருள் முடி வடிவம் கிடைக்கிறது. இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் அந்த வாலிபரை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

    • சில வீடியோக்கள் ஆபத்தானதாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கும்.
    • 9 வினாடிகள் ஓடும் அந்த வீடியோவில் ஆயிரக்கணக்கான பயனர்கள் பார்த்துள்ளனர்.

    சமூகவலை தளங்களில் விலங்குகள் தொடர்பான புதுப்புது வீடியோக்கள் தொடர்ந்து வெளியாகி கொண்டே இருக்கின்றன. அவற்றில் சில வீடியோக்கள் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கும். சில வீடியோக்கள் ஆபத்தானதாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கும். அந்த வகையில் தற்போது டுவிட்டரில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் ஒரு ஆற்றில் நூற்றுக்கணக்கான முதலைகள் இருப்பதை காண முடிகிறது.

    அந்த ஆற்றில் மோட்டார் பொருத்திய படகு ஒன்று முதலைகளின் நடுவே வேகமாக செல்வதையும் காண முடிகிறது. பார்ப்பதற்கு திகிலை ஏற்படுத்தும் இந்த வீடியோ சிசிடிவி இடியட்ஸ் என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. 39 வினாடிகள் ஓடும் அந்த வீடியோவில் ஆயிரக்கணக்கான பயனர்கள் பார்த்துள்ளனர்.

    • மீண்டும் ஒரு நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் வகையில் தயாராகுங்கள்
    • ஆணவத்தின் விளைவால் 400 இடங்களில் இருந்த நீங்கள் 40 ஆக குறைந்துள்ளீர்கள்

    இந்தியாவில் ஆளும் பா.ஜ.க.வின் அரசாங்கத்திற்கெதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்காக இரண்டு நோட்டீஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இந்த விவகாரம் நாடு முழுவதும் பேசுபொருளாகி உள்ள நிலையில், 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது ஜனாதிபதி உரை மீதான விவாதத்தில் பிரதமர் மோடி பேசியபோது பதிவு செய்யப்பட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

    1984ம் வருடம் மக்களவையில் 2 இடங்கள் மட்டுமே பா.ஜ.க.விற்கு கிடைத்தது. காங்கிரஸ் 404 உறுப்பினர்களை கொண்டு அசுர பெரும்பான்மையுடன் இருந்தது. 2014லிருந்து காங்கிரசின் வீழ்ச்சியும், பா.ஜ.க.வின் வளர்ச்சியும் ஒரே நேரத்தில் நடைபெற்றது.

    மோடியின் தலைமையில் வளர்ந்து வந்த பா.ஜ.க., 2018ம் வருடம் ஒரு நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் தோற்கடித்தது.

    இந்த இரண்டையும் மறைமுகமாக குறிப்பிட்டு 2019ல் மோடி பேசியிருந்தார். அவர் பேசியிருப்பதாவது:

    எனது வாழ்த்துக்களை உங்களுக்கு (எதிர்க்கட்சிகளுக்கு) தெரிவிக்க விரும்புகிறேன். 2023ல் மீண்டும் ஒரு நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் வகையில் தயாராகுங்கள். சேவை உணர்வால் 2 உறுப்பினர்களாக இருந்த நாங்கள் இங்கே ஆட்சியில் அமர்ந்திருக்கிறோம். ஆணவத்தின் விளைவால் 400 இடங்களில் இருந்த நீங்கள் 40 ஆக குறைந்துள்ளீர்கள். இன்று நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்று பாருங்கள்.

    இவ்வாறு அவர் பேசியிருந்தார்.

    அவர் பேச்சை ரசிக்கும் விதமாக ஆளும் கட்சி உறுப்பினர்கள் சிரிப்பதையும், அவரது கருத்துக்களை ஆமோதிக்கும் விதமாக அவர்கள் மேசையை தட்டி ஓசை எழுப்புவதையும் அந்த வீடியோவில் காண முடிகிறது.

    அன்று பிரதமர் கருத்து தெரிவிக்கும்போது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்ற கட்சி தலைவர்களுடன் அவையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    2018ல், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, பல எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் முன்வைத்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை பா.ஜ.க. அரசாங்கம் தோற்கடித்தது.

    இம்முறை மணிப்பூர் விவகாரம் தீவிரமடைந்துள்ள நிலையில் மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை காங்கிரஸ் கொண்டு வருகிறது.

    இந்த முறையும் அதுதான் நடக்கும் என்று பாஜகவினர் கூறுகின்றனர். அத்துடன் மோடியின் பழைய வீடியோவை பகிர்ந்து, 'இன்றைய தீர்மானம் குறித்து மோடி அன்றே சொன்னார்', என வர்ணிக்கின்றனர்.

    • இந்த கார்கள், இன்சூரன்ஸ் பிரீமியம் செலுத்தாததால் பறிமுதல் செய்யப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
    • தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    வடமாநிலங்களில் பெய்த கனமழை காரணமாக நீர்நிலைகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளன. ஆறுகளில் தண்ணீர் அபாய அளவை தாண்டி பெருக்கெடுத்து ஓடுகிறது. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவின் ஹிண்டன் ஆற்றில் இன்று திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கரையோர பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதில், சுதியானா கிராமத்தின் அருகே நிறுத்தப்பட்டிருந்த 400க்கும் மேற்பட்ட கார்கள் நீரில் மூழ்கி உள்ளன. காரின் மேற்பகுதி மட்டுமே தெரியும் அளவிற்கு தண்ணீர் சூழ்ந்துள்ளது. இந்த கார்கள் அனைத்தும் இன்சூரன்ஸ் பிரீமியம் செலுத்தாததால் பறிமுதல் செய்யப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகிஉள்ளது. இந்த கார்களை வெள்ளம் சூழ்ந்த வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.

    இதற்கிடையே, மகாராஷ்டிரா, அரியானா, சண்டிகர், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், இமாச்சல பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

    • பெண் விமானியின் முடியை இழுத்து பெண்கள் தர்ம அடி கொடுத்தனர்
    • அவரது கணவரை ஒரு கும்பல் தாக்கியது

    10 வயது சிறுமியை வீட்டுப் பணிக்கு நியமித்து, சித்திரவதையும் செய்ததாக கூறி ஒரு பெண் விமானியும், விமான ஊழியரான அவரது கணவரும், ஒரு கும்பலால் தாக்கப்பட்டனர். இதுகுறித்த வீடியோ இணைய தளத்தில் வைரலாகியுள்ளது.

    இந்த வீடியோவில் சீருடையில் இருக்கும் அந்த பெண் விமானியை அந்த கும்பலில் பலர் பலமுறை அறைகிறார்கள். அவள் தலையில் தாக்கப்பட்ட நிலையில், உதவிக்காக அழுகிறார். பல பெண்களால் ஒரே நேரத்தில் அவர் அடிக்கப்படுகிறார். ஒரு கட்டத்தில் அவர் மன்னிப்பு கேட்டு அலறுகிறார். ஆனாலும் தாக்குதல் தொடர்கிறது.

    அவரது கணவர் மற்றொரு குழுவினரால் தனியாக தாக்கப்படுகிறார். அவரும் தனது மனைவியைக் காப்பாற்ற முயற்சிக்கிறார். இந்த தாக்குதல்களை தடுக்க சிலர் முற்படுகின்றனர். ஒருவர் "அவள் இறந்துவிடுவாள்" என்று அலறுகிறார்.

    தகவல்களின்படி இரண்டு மாதங்களுக்கு முன்பு, அத்தம்பதியினர் ஒரு 10 வயது சிறுமியை வீட்டு வேலைகளுக்கு அமர்த்தியுள்ளனர். இன்று, அந்த சிறுமியின் உறவினர் ஒருவர் அச்சிறுமியின் கைகளில் காயங்களைக் கண்டு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்.

    அந்த சிறுமியை அத்தம்பதியினர் அடித்து துன்புறுத்துவார்கள் என அப்பகுதி மக்கள் சிலர் குற்றம்சாட்டியுள்ளனர். இப்பின்னணியில் சிறுமியின் கைகளிலும், கண்களின் கீழும் காயங்களை கண்டதனால் ஒரு கூட்டம் கூடி அத்தம்பதியை கடுமையாக தாக்கியுள்ளனர்.

    காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அத்தம்பதியை கைது செய்தனர். வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

    இந்தியாவில் குழந்தைகளை வீட்டு வேலைகளுக்கோ வேறு பணிகளுக்கோ அமர்த்துதல் சட்டப்படி குற்றம். ஆனாலும் பல இடங்களில் இது தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

    • சந்திரயான்-3 விண்ணில் ஏவப்பட்ட காட்சியை பலரும் தங்கள் செல்போன்களில் படம் பிடித்தனர்.
    • மேகங்களை கிழித்துக்கொண்டு ராக்கெட் சீறிப்பாய்வது வீடியோவில் தெளிவாக தெரிகிறது.

    நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை இஸ்ரோ விண்ணில் செலுத்தி உள்ளது. புவியின் சுற்றுப்பாதையில் நுழைந்து சுற்றி வரும் விண்கலத்தின் செயல்பாடு இயல்பாக உள்ளது. இந்த நீள்பட்ட சுற்றுப்பாதையை படிப்படியாக உயர்த்தி விண்கலம் நிலவுக்கு நெருக்கமாக கொண்டு செல்லப்படும். அந்த வகையில் சுற்றுப்பாதையை உயர்த்தும் முதல் முயற்சி வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டுள்ளது. விண்கலம் இப்போது பூமிக்கு நெருக்கமாக 173 கிமீ, அதிகபட்ச தொலைவாக 41,762 கி.மீ. என்ற சுற்றுப்பாதையில் சுற்றி வருகிறது.

    கடந்த 14ம் தேதி சந்திரயான்-3 விண்ணில் ஏவப்பட்ட காட்சியை பலரும் தங்கள் செல்போன்களில் படம் பிடித்தனர். தொலைக்காட்சிகள் நேரலையாக ஒளிபரப்பின. வீடியோ எடுத்து வெளியிட்டன. அன்றைய தினம் முழுவதும் இந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்கள் அனைத்திலும் வெளியாகின.

    அவ்வகையில், சந்திராயன்-3 விண்கலத்தை சுமந்துகொண்டு ராக்கெட் (எல்விஎம்-3) சீறிப்பாய்ந்து சென்ற காட்சி விமானத்தில் இருந்து வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து டாக்கா நோக்கி சென்ற விமானத்தின் ஜன்னல் வழியாக ஒரு பயணி அந்த வீடியோவை பதிவு செய்துள்ளார். மேகங்களை கிழித்துக்கொண்டு ராக்கெட் சீறிப்பாய்வது அதில் தெளிவாக தெரிகிறது. இந்த வீடியோ வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

    இந்த வீடியோவை இஸ்ரோ மெட்டீரியல்ஸ் இயக்குநர் (ஓய்வு) மற்றும் ராக்கெட் உற்பத்தி நிபுணர் டாக்டர் பிவி வெங்கடகிருஷ்ணன் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ லட்சக்கணக்கான பார்வைகளையும் ஏராளமான லைக்குகளையும் பெற்றுள்ளது. வீடியோவை எடுத்த பயணியின் புகைப்படத் திறமையை சிலர் வியந்து பாராட்டி உள்ளனர்.

    • வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 300 மில்லி மீட்டருக்கும் மேல் மழை கொட்டித் தீர்த்தது.
    • வீடியோவில் கரைபுரண்டோடும் வெள்ளத்தில் சிக்கிய நாயை மீட்க ஒருவர் சாய்ந்த ஏணி மூலம் இறங்குகிறார்.

    டெல்லி, இமாச்சலபிரதேசம், காஷ்மீர், சண்டிகர் உள்ளிட்ட பல மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சண்டிகரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 300 மில்லி மீட்டருக்கும் மேல் மழை கொட்டித் தீர்த்தது.

    இதனால் சண்டிகரில் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் சண்டிகரின் குடா லாகூர் பாலத்தின் கீழ் பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய நாய் ஒன்றை ஒருவர் உயிரை பணயம் வைத்து போராடி மீட்ட காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. சண்டிகர் காவல்துறையால் டுவிட்டரில் பகிரப்பட்ட இந்த வீடியோவில் கரைபுரண்டோடும் வெள்ளத்தில் சிக்கிய நாயை மீட்க ஒருவர் சாய்ந்த ஏணி மூலம் இறங்குகிறார்.

    அதன்மூலம் நாயை மீட்ட அவர் அதனை ஒரு கையில் வைத்துக் கொண்டு மற்றொரு கையில் ஏணிப்படிக்கட்டுகளை பிடித்துக் கொள்கிறார். பாலத்தின் மேல் நிலையில் போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் அவரை வெளியே இழுப்பது போன்று காட்சிகள் உள்ளது. கடந்த 10-ந் தேதி வெளியிடப்பட்ட இந்த வீடியோ 98 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது. வீடியோவை பார்த்த பயனர்கள் நாயை மீட்ட நபர் மற்றும் போலீசாரின் முயற்சிகளை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • பல்லாயிரக்கணக்கானோர் பார்த்து லைக், கமெண்ட் செய்ததால் வைரலாக பரவியது.
    • இளம்பெண்ணின் வீடியோவை பார்த்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

    உத்திரபிரதேசம்:

    இன்ஸ்டாகிராமில் லைக்ஸ், கமெண்ட்ஸ், பெற்று அனைவரிடமும் பிரபலமாக வேண்டும் என்பதற்காக சிலர் எந்த சாகசத்தையும் செய்யத் தயங்குவதில்லை. சிலர் மலைகளில் ஏறி வீடியோ எடுக்கிறார்கள்.

    ரெயில் தண்டவாளத்தில் ஆபத்தான நிலையில் வீடியோ பதிவு செய்கிறார்கள். ஒரு சிலர் ரெயில்வே பிளாட்பாரத்தில் நடனம் ஆடுகின்றனர்.

    இதுபோல பிரபலமாகும் ஆசையில் இளம்பெண் ஒருவர் ரூ.15 ஆயிரம் இழந்துள்ளார்.

    உத்தரப்பிரதேசம் மாநிலம், வர்ணிகா பிரயாக் மாவட்டத்தில் உள்ள சிவிலியன் பகுதியை சேர்ந்தவர் 20 வயது இளம்பெண்.

    இவர் இன்ஸ்டாகிராமில் பிரபலமாக வேண்டும் என ஆசைப்பட்டார். மணப்பெண் போல் உடை அணிந்து சொகுசு கார் மீது முன்னால் அமர்ந்து பிரபலமான பாடலுக்கு நடனமாடினார். முக்கிய சாலைகளில் சென்று வீடியோவை பதிவு செய்தார்.

    இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவிட்டார். இதனை பல்லாயிரக்கணக்கானோர் பார்த்து லைக், கமெண்ட் செய்ததால் வைரலாக பரவியது.

    ஒரு சிலர் இது குறித்து போக்குவரத்து போலீசாரின் கவனத்துக்கு கொண்டு சென்றனர்.

    இளம்பெண்ணின் வீடியோவை பார்த்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர். வீடியோவில் இளம்பெண் அமர்ந்து சென்ற காரின் பதிவு எண்ணை வைத்து இளம்பெண்ணின் விவரங்களை கண்டுபிடித்தனர்.

    போக்குவரத்து விதிகளை மீறி இளம்பெண் முக்கிய சாலைகளில் காரின் மீது அமர்ந்து வீடியோ பதிவு செய்ததாக ரூ.15,500 அபராதம் விதித்தனர். இனிமேல் இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என இளம்பெண்ணை எச்சரித்து அனுப்பி வைத்தனர். 

    • நடந்த சம்பவத்தை செல்போனில் பதிவு செய்வதை பார்த்த காவலர் செல்போனை பறிக்க முயற்சிக்கிறார்.
    • அசோக சக்கரம் இல்லாததால் அது இந்திய கொடி அல்ல என ஷிரோமணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டி தெரிவித்துள்ளது.

    புதுடெல்லி:

    பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் சீக்கியர்களின் வழிபாட்டு தலமான பொற்கோவிலுக்கு சென்ற ஒரு பெண் திருப்பி அனுப்பப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த பெண் தனது முகத்தில் இந்திய தேசியக் கொடி போன்று மூவர்ணத்தை வரைந்து சென்றதால் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    அந்த வீடியோவில் பொற்கோவில் பாதுகாவலர், அந்த பெண்ணை உள்ளே செல்லக்கூடாது என்று சொல்கிறார். அந்த பெண், இது இந்தியா இல்லையா? என் கேட்கிறார். அதற்கு பதிலளித்த காவலர் 'இது பஞ்சாப்' என கூறுகிறார். இது இந்தியா இல்லையா என்று காவலரிடம் திரும்பத் திரும்பக் கேட்டதற்கும், அவர் இல்லை என்றே தலையசைக்கிறார். நடந்த சம்பவத்தை அந்தப் பெண் தனது செல்போனில் பதிவு செய்வதை பார்த்த காவலர் செல்போனை பறிக்க முயற்சிக்கிறார். அத்துடன் அந்த வீடியோ நிறைவடைகிறது.

    அந்த அதிகாரியின் செயலுக்கு பொற்கோயிலை நிர்வகிக்கும் ஷிரோமணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டி மன்னிப்பு கேட்டுள்ளது. அந்த பெண்ணின் முகத்தில் வரைந்திருந்த சின்னத்தில் அசோக சக்கரம் இல்லாததால் அது இந்திய கொடி அல்ல, அரசியல் கொடியாக இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

    விபத்துக்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    கிங்க்ஸ்டன்:

    கரீபியன் நாடுகளில் ஒன்றான ஜமைக்காவில் சிங்கம் ஒன்று பரமாரிப்பாளரின் விரலை கடித்து குதறும் வீடியோ இணையத்தில் 

    வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அந்த வீடியோவில் கூண்டுக்குள் உள்ள சிங்கத்தை, பராமரிப்பாளர் தொட முயன்றார். சிங்கம் அவரைப்பார்த்து உருமியப்படி இருந்தது. 

    இருப்பினும் அவர் தொடர்ந்து சிங்கத்தை தொட்டு விளையாடியபடி இருந்தார். இதனால் ஆத்திரமடைந்த சிங்கம் அவரது விரலை கடித்து 

    குதறியது. 15 பேர் இந்த சம்பவத்தை நின்று வேடிக்கை பார்த்தனர். இந்த சம்பவத்தால் பராமரிப்பாளரின் விரல் முழுவதும் 

    துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து பராமரிப்பாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    மேலும் விபத்துக்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


    ×